நல்ல பாம்பு குட்டியை கையிலேந்தி விளையாடும் நடிகை பிரவீனா!



மலையாள நடிகையான பிரவீனா, இவர் தமிழில் வெற்றிவேல், தீரன் அதிகாரம் ஒன்று, சாமி 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Actress Praveena
இதைவிட சன் டிவியில் ஒளிப்பரப்பான 'பிரியமானவளே' நாடகத்தின் மூலமே இவருக்கு தமிழில் பெரிய அடையாளம் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தற்போது மகராசி என்ற தொடரிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரவீனா வெளியிட்ட புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள கரமனையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் இவரது வீட்டு கோழிக்கூட்டில் நல்ல பாம்பு ஒன்று திடீரென புகுந்தது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அருகில் உள்ள பாம்பு பண்ணைக்குத் தகவல் தெரிவித்தார். அங்குள்ள ஊழியர்கள் விரைந்து வந்து கோழி கூட்டிலும் அதன் சுற்றுப்புறங்களில் பாம்பைத் தேடினர். ஆனால், அது கிடைக்கவில்லை.  ஆனால், கோழி கூட்டுக்குள் பிறந்து சில நாட்களான நல்லபாம்பு குட்டி ஒன்று இருந்ததை கண்டனர். இதைப் பாம்பு பண்ணை ஊழியர்கள் லாவமாக பிடித்தனர். குட்டியாக இருந்தாலும் அது படமெடுத்து ஆடியபடி இருந்தது. 

Praveena with Snake
இதனால் பிரவீணா உட்பட அவர் வீட்டில் இருந்தவர்கள் பயந்தனர்.  ஆனால், ஊழியர்கள் குட்டி பாம்பை கண்டு அஞ்ச வேண்டாம் என்று நம்பிக்கைக் கொடுத்தனர். பின்னர் அந்த குட்டிப் பாம்பை, பிரவீணா கையில் கொடுத்தனர். அதை இரண்டு கைகளிலும் தைரியத்துடன் பெற்றுக்கொண்ட பிரவீணா லேசாக பயந்தார்.  அந்தப் பாம்பு கையில் இருந்தபடி  படமெடுத்து ஆடியது இந்த வீடியோவை தனது யூ-டியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Video:






செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்... 
மேலும் உடனடி செய்திகளுக்கு Subscribe to Film Crazy 

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Atas Artikel

Ads Tengah Artikel 1

Ads Tengah Artikel 2

Ads Bawah Artikel