Cinema News
Jyothika
Ponmagal Vandhal
Prime News
Soorarai Pottru
Suriya
சூரரைப் போற்று படத்தை திரையிட மாட்டோம்! திரையரங்க உரிமையாளர் சங்கம்
Sunday, April 26, 2020
0
![]() |
Soorarai Pottru Release Issue |
சூர்யாவின் சூரரைப் போற்று பட வெளியீட்டில் பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் பல்வேறு தொழில்கள் முற்றிலும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. அந்த வகையில் சினிமா துறையும் விதிவிலக்கல்ல. பல்வேறு படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு தயாரிப்பாளர்கள் திண்டாடிவரும் நிலையில், மறுபக்கம் எல்லா வேலைகளும் முடிந்து ரிலீசிற்கு தயாராகியுள்ள படங்களின் பட்டியலும் மிக நீண்டவை.
![]() |
Pic: Google |
கொரோனா பாதிப்பால் ஊரடங்கை கடைப்பிடித்துவரும் நிலையில், திரையரங்குகள் திறக்க மேலும் இரு மாதங்கள் ஆகுமென பேச்சு நிலவி வருகிறது. அப்படியே திறந்தாலும் முதலில் பெரிய படங்களுக்கு தான் முன்னுரிமை கொடுப்பார்கள், சிறு படங்களின் நிலைமை என்ன? என்ற கேள்வியும் தலைத்தூக்கி உள்ளது. இந்த நேரத்தை பயன்படுத்தி அமேசான், நெட் ஃபிலிக்ஸ் போன்ற OTT நிறுவனங்கள் படங்களை வாங்கி குவிக்க துவங்கியுள்ளன.
![]() |
Ponmagal Vandhal Movie Poster |
சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'பொன்மகள் வாந்தால்' படத்தை நேரடியாக அமேசான் பிரைமில் வெளியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியது. இதுக்குறித்து திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள வீடியோவில், ''இந்த முடிவை நாங்கள் எதிர்கிறோம். 'பொன்மகள் வந்தாள்' டிஜிட்டல் ஃபிளாட்பார்மில் வெளியானால், 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்படாது.
![]() |
Suriya in Soorarai Pottru |
திரைப்படங்கள் முதலில் திரையரங்குகளில் தான் வெளியாக வேண்டும். பின்னர் தான் டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் வெளியாக வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் 'சூரரைப் போற்று' படம் வெளியாவதில் பெரும் சிக்கல் உருவாகியுள்ளதாக திரைத்துறையில் வட்டாரத்தில் கூறிவருகின்றனர்.
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்...
மேலும் உடனடி செய்திகளுக்கு Subscribe to Film Crazy
Previous article
Next article
Leave Comments
Post a Comment