ஜோதிகா படத்தைத் தொடர்ந்து OTT ல் வெளியாகும் அனுஷ்கா திரைப்படம்?

Jyothika - Anushka Shetty

கொரோனா தாண்டவம் சற்றும் குறையாத இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு இரண்டு வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

Ponmagal Vandhal Poster
இந்நிலையில் தியேட்டர்கள், மால்கள் எல்லாம் திறக்க எப்படியும் மேலும் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகுமென கூறப்படும் நிலையில், தயாரிப்பாளர்கள் OTT தளங்கள் நோக்கி படையெடுத்துள்ளன. முதல் படமாக RK நகர் திரைப்படம் நேரடியாக வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து ஜோதிகா நடிப்பில் பொன்மகள் வந்தாள், சித்தார்த் நடிப்பில் டக்கர், யோகி பாபு நடிப்பில் காக்டெயில் என வரிசைக்கட்டி நிற்கிறது திரைப்படங்கள்.


Anushka in Nishabdham 

இங்கு தான் இப்படியென்றால் தெலுங்கையும் விட்டுவைக்கவில்லை இந்த டிஜிட்டல் தளங்கள். அனுஷ்கா, மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகியுள்ள 'நிசப்தம்' திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு அனுஷ்கா நடித்துள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியிருக்கும் நிலையில், படக்குழுவை அணுகியுள்ளது டிஜிட்டல் தளம். மேலும், எதிர்ப்பார்த்ததை விட அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.





செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்... 
மேலும் உடனடி செய்திகளுக்கு Subscribe to Film Crazy 

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Atas Artikel

Ads Tengah Artikel 1

Ads Tengah Artikel 2

Ads Bawah Artikel