Arun Vijay
Cinema News
Prime News
உடற்பயிற்சியின் போது தவறி விழுந்த அருண் விஜய்! வைரல் வீடியோ
Saturday, May 16, 2020
0
திரையுலகில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகர் அருண் விஜய்.
இவர் நடிப்பில் வெளியான 'தடம்' இவரது சினிமா வாழ்கையை புரட்டி போட்டது, அந்த அளவிற்கான வெற்றி அது. இதையடுத்து வெளியான மாஃபியா படம் தோல்வியடைந்தாலும் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது. இப்படத்தையடுத்து தற்போது அக்னி சிறகுகள், சினம், பாக்சர், சிந்தாபாத் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். டுவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் அருண் விஜய், சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் தலைகீழாக தொங்கியபடி உடற்பயிற்சி செய்யும் போது தவறி விழுகிறார். இந்த வீடியோவுடன் "இதை எப்போதும் செய்யாதீர்கள். ஒர்கவுட் செய்யும் முன்பு உங்களது மெஷின் சரியாக இருக்கிறதா என சரிபார்த்து கொள்ளுங்கள். இப்படி விழுந்து எனது கால் முட்டி ஒரு வாரத்திற்கு வீங்கி இருந்தது. நல்ல வேளை என்னுடைய தலையில் அடி படவில்லை. மேலும், இந்த விபத்தால் ஒரு பாடத்தை கற்றுக்கொண்டேன். எப்போதும் தனியாக ட்ரெய்னர் இல்லாமல் ஒர்கவுட் செய்யாதீர்கள்" என அருண் விஜய் ரசிகர்களுக்கு அட்வைஸும் கொடுத்துள்ளார்.
![]() |
Arun Vijay in Thadam |
![]() |
Arun Vijay in Mafia |
வீடியோ:
Previous article
Next article
Leave Comments
Post a Comment