Chaya Singh
Cinema News
Prime News
மீண்டும் மன்மதராசா பாடலுக்கு நடனமாடிய நடிகை சாயாசிங்!
Tuesday, May 19, 2020
0
கடந்த 2003 -ஆம் ஆண்டு தனுஷ் - சாயாசிங் நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்ட திரைப்படம் 'திருடா திருடி'.
சுப்ரமணிய சிவா இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு தினா இசையமைத்திருந்தார். இப்படத்தின் மற்ற பாடல்கள் எல்லாம் ஹிட் என்றால், இப்படத்தில் இடம்பெற்ற 'மன்மதராசா' பாடல் பட்டித்தொட்டி எங்கும் சூப்பர் ஹிட் அடித்தது. சொல்லப்போனால் இந்த படத்திற்கு முதுகெலும்பாக இருந்ததே இப்பாடல்தான். அதேபோல் பாடலின் வேகத்திற்கு ஏற்ற தனுஷ்- சாயாசிங்கின் நடனம் மேலும் வலுசேர்த்தது. இந்நிலையில் சுமார் 17 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இப்பாடலை கையிலெடுத்துள்ளார் சாயாசிங்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது பிறந்தநாள் சிறப்பாக 'மன்மதராசா' பாடலுக்கு மீண்டும் நடனம் ஆடியுள்ளார் சாயாசிங். கூடுதலாக இதில் தனுஷிற்கு பதில் நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் இடம்பெற்றுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
![]() |
Thiruda Thirudi |
![]() |
Chaya Singh |
வீடியோ:
Previous article
Next article
Leave Comments
Post a Comment