கொரோனா ஆபத்தால் இந்தியாவில் போடப்பட்டிருக்கும் ஊரடங்கால் பல தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
 |
Director Hari |
அதில் சினிமா பெரிய அளவிலே பாதிக்கப்பட்டுள்ளது, இதனால் பல தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் தளங்களை நோக்கி படையெடுத்துள்ளனர். தயாரிப்பு தரப்பை பொறுத்தவரை அனைத்து நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் அனைவரும் தங்களது சம்பளத்தைக் குறைத்து கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதலில் விஜய் ஆண்டனி தான் நடித்து வரும் மூன்று படங்களில் 25% சம்பளத்தை குறைத்து கொள்வதாக கூறியுள்ளார். அவரைத் தொடர்ந்து இயக்குனர் ஹரி, தான் அடுத்து இயக்கவிருக்கும் 'அருவா' படத்திற்கான தனது சம்பளத்தில் 25% குறைத்து பெற்றுக்கொள்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இவர்களை மற்ற அனைவரும் முன் வந்தால் தயாரிப்பளர்களின் சுமை குறையும். பொறுத்திருந்து பார்ப்போம்...
Leave Comments
Post a Comment