பாடகியாக மாறிய நடிகை ஜனனி ஐயர்! ரசிக்கும் குரலில் வெளியான பாடல்

Janani Iyer debuts as a singer


அவன் இவன் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜனனி ஐயர்.

இப்படத்தைத் தொடர்ந்து தெகிடி, அதே கண்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள இவர் பிக்பாஸ் சீசன் 2 நிகச்சியிலும் பங்கேற்றார். ஆனாலும் சினிமா கரியரில் இதுவரை பெரிய திருப்பங்களோ, பெயர் சொல்லும் பாத்திரங்களோ இவருக்கு அமையவில்லை. தற்போது கசட தபர, தொல்லைக்காட்சி போன்ற ஓரிரு படங்களே தற்போது கைவசம் வைத்துள்ளார்.




இந்நிலையில் ரசிகர்களை வேறுவழியில் கவர பாடகி அவதாரத்தை எடுத்துள்ளார். அஸ்வின் விநாயகமூர்த்தி இசையில் 'உன் நெருக்கம்' என துவங்கும் பாடலை பாடியுள்ளார். இதில் அஸ்வின் - ஜனனி இருவரும் பாடியுள்ளனர், பாடலும் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. ஜனனியின் குரலும் மிக அருமையாக வியக்கத்தக்க வகையில் உள்ளது. இதுகுறித்து  ஜனனி ஐயர், "முதல்முறையாக என்னால் முடிந்தளவு முயற்சி செய்து பாடியுள்ளேன். இந்த பாடலை பாட எனக்கு ஊக்கம் அளித்த அஸ்வினுக்கு நன்றி. இந்த பாடல் ஸ்கைப் மூலம் ரிக்கார்டிங் செய்யப்பட்டது. இந்த பாடல் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்’ என கூறியுள்ளார்.

பாடல் வீடியோ:







செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்... 
மேலும் உடனடி செய்திகளுக்கு Subscribe to Film Crazy 
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Atas Artikel

Ads Tengah Artikel 1

Ads Tengah Artikel 2

Ads Bawah Artikel