Cinema News
Keerthy Suresh
Penguin
Prime News
OTT ல் வெளியாகும் கீர்த்தி சுரேஷின் ‘பெண் குயின்’?
Monday, May 11, 2020
0
கொரோனா ஊரடங்கால் சினிமா துறை பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளது, எல்லாம் பணிகளும் முடிவடைந்து ரெடியாகி இருக்கும் படங்களின்
நிலை இன்னும் மோசம். இனி எப்போது ரிலீஸ் தேதி கிடைக்கும் என புலம்ப ஆரமித்துள்ளனர்.
இந்த நேரத்தைப் பயன்படுத்தி OTT
தளங்கள் தங்களை மேலும் நிலை நிறுத்த, இதுபோன்று ரெடியாகியுள்ள அதுவும் கரன்ட்
டிரன்டிங்கில் உள்ள நாயகர், நாயகிகள் படங்களை மட்டுமே குறிவைக்க துவங்கியுள்ளது. அந்த
வகையில் பொன்மகள் வந்தாள், RK நகர், காக்டெயில், டக்கர் உள்ளிட்ட படங்களை OTT
தளங்கள் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில்
தற்போது கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பெண் குயின்’ படத்தையும் OTT தளம்
வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாநடி படத்திற்கு பிறகு கீர்த்தி
சுரேஷ் நடிப்பில் மிஸ் இந்தியா, பெண் குயின், அண்ணாத்தே மற்றும் மேலும் இரு
தெலுங்கு படங்கள் என வரிசைக்கட்டி நின்றாலும், வெளியாவது தள்ளிக்கொண்டே செல்கிறது.
இதில் கார்த்தி சுப்பராஜ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக்
இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘பெண்
குயின்’. கர்பிணியாக கீர்த்தி சுரேஷ் நிற்கும் படத்துடன் இப்படத்தின் முதல்
பார்வையும் வெளியாகி எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியது. இந்நிலையில் இப்படமும் OTT
தளத்தில் வெளியாகவுள்ளதாக பிரபல PRO ப்ரியா தனது டுவிட்டர் பக்கத்தில்
தெரிவித்துள்ளார். எந்த நிறுவனம் வாங்கியுள்ளது எனவும், மேலும் இதுக்குறித்த
அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Previous article
Next article
Leave Comments
Post a Comment