விஜயின் 'மாஸ்டர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி? முழுவிவரம் உள்ளே




'தளபதி' விஜய் மற்றும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாஸ்டர்'.

Master Movie Second look
XB கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மாஸ்டர் படத்தின் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வரும் நிலையில் படம் எப்போது வெளியாகுமென ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.



Master Movie Poster
கடந்த ஏப்ரல் 9 -ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படம் கொரோனா ஊரடங்கால் தள்ளிப்போனது. இதனிடையே தியேட்டர்கள் திறக்கவே இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகுமென கூறப்பட்டு வரும் நிலையில், மாஸ்டர் படம் நவம்பர் மாதம் 14 -ஆம் தேதி தீபாவளி வெளியீடாக இருக்குமென கூறப்பட்டு வருகிறது. தற்போது இப்படத்தின் சவுண்ட் மிக்சிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.







செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்... 
மேலும் உடனடி செய்திகளுக்கு Subscribe to Film Crazy 


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Atas Artikel

Ads Tengah Artikel 1

Ads Tengah Artikel 2

Ads Bawah Artikel