தளபதி 65 படத்தின் இசையமைப்பாளர் இவரா? ரசிகர்கள் கொண்டாட்டம்


Thalapathy 65 Movie Latest Update


தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

Thalapathy Vijay in Sarkar
இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து ரிலீஸ் தேதியை எதிர்நோக்கி காத்திருக்கிறது. ஏற்கனவே இப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் தள்ளிப்போனது. இதனால் தீபாவளி வெளியீடாக மாஸ்டர் இருக்கலாம் என திரைத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்நிலையில் விஜயின் 65 வது படத்தை (Thalapathy 65) இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார் என கிட்டத்தட்ட அதிகாரப்பூர்வ தகவலாக கூறப்படுகிறது.

Vijay - Thaman.S
இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது, மேலும் இப்படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி தளபதி 65 படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தமன், தமிழில் ஒஸ்தி, வாலு உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். கூடுதலாக இவர் இசையில் சமீபத்தில் வெளியான 'அலா வைகுந்தபுரமுலோ' பட பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை தளபதி ரசிகர்கள் சமூக தளங்களில் டிரன்டிங் செய்து வருகின்றனர். இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப் படுகிறது.







செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்... 
மேலும் உடனடி செய்திகளுக்கு Subscribe to Film Crazy 


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Atas Artikel

Ads Tengah Artikel 1

Ads Tengah Artikel 2

Ads Bawah Artikel