Cinema News
Prime News
Varalaxmi Sarathkumar
திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வாய்த்த வரலக்ஷ்மி!
Tuesday, May 19, 2020
0
'போடா போடி' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை வரலக்ஷ்மி, இதையடுத்து தாரை தப்பட்டை, சர்கார், சண்டக்கோழி 2 உட்பட பல படங்களில் நடித்து முடித்து விட்டார்.
கன்னி ராசி, காட்டேரி, ராஜ பார்வை, சேசிங், டேனி என அரை டஜன் படங்களை தனது கைவசம் வைத்துள்ளார் வரலக்ஷ்மி. இந்நிலையில் தற்போது திருமண வதந்தி லிஸ்டிலும் இணைந்துள்ளார். ஆம், வரலக்ஷ்மிக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டதாகவும், விரைவில் திருமணம் எனவும் செய்தி பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில் உண்மை நிலவரத்தை பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, "என் கல்யாணத்துல மத்தவங்களுக்கு அப்படியென்ன ஆசைன்னு தெரிய வில்லை. எனக்கு கல்யாணம் நடக்கும் போகிறது என்றால்,அனைவரிடமும் வெளிப்படையாக கூறுவேன். கூரை மேலே ஏறி கத்தி சொல்லுவேன். போதுமா? இதைப் பத்தி எழுதிக்கிட்டு இருக்கும் மீடியா மக்களே, நான் இப்ப கல்யாணம் செஞ்சுக்கலை. சினிமாவைவிட்டு விலகறதா இல்லை என்று காரசாரமாக தனது பதிலை கூறியுள்ளார்.
![]() |
Varalaxmi Sarathkumar |
Previous article
Next article
Leave Comments
Post a Comment