Cinema News
Maanaadu
Prime News
Simbu
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரசிகரிடம் போனில் பேசிய சிம்பு!
Friday, May 8, 2020
0
வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தைத் தொடர்ந்து பெரிய இடைவெளி எடுத்துக்கொண்ட சிம்பு, தற்போது மீண்டும் தனது திரைப்பயனத்தை துவங்கியுள்ளார்.
![]() |
Simbu Stills |
வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் சிம்பு தற்போது நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. சென்னையில் துவங்கிய மாநாடு படத்தின் படப்பிடிப்பு, அதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் தொடர்ந்தது. கொரோனா பாதிப்பால் தற்போது எந்த வேலையும் நடைபெறாததால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, தனது ரசிகர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை கேள்விப்பட்ட சிம்பு, உடனே அவருக்கு போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும், விரைவில் குணமடைவீர்கள், கவலை படவேண்டாம் என கூறி அவருக்கு ஊக்கம் கொடுத்துள்ளார் சிம்பு. இந்த செய்தி தற்போது சிம்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்...
மேலும் உடனடி செய்திகளுக்கு Subscribe to Film Crazy
Previous article
Next article
Leave Comments
Post a Comment