SPB -க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட நான் காரணமா? பாடகி மாளவிகா


லெஜன்டரி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனா பாதிப்புள்ளாகி தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார். ஒட்டுமொத்த திரையுலகம், இசை ரசிகர்களும் SPB சீக்கிரம் குணமடைந்து வர வேண்டும் என்று தங்களது வேண்டுதலை கூறிவருகின்றனர். இந்நிலையில், டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகி மாளவிகாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாகவும்,  கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தும் மாளவிகா எஸ்.பி.பி. கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் மூலமாகத் தான் எஸ்.பி. பால சுப்ரமணியத்திற்கு கொரோனா வைரஸ் பரவியது எனவும் வாட்ஸ்ஆப்பில் செய்தி ஒன்று தீயாக பரவியது. 

singer Malavika Pantula about SPB Rumors

இதனைக் கண்ட மாளவிகா தற்போது இதுக்குறித்து விளக்கமளித்துள்ளார், அவர் கூறியுள்ளதாவது, "டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பு எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தும் நான் பங்கேற்றதாக வாட்ஸ் ஆப்பில் ஒரு பொய்யான தகவல் வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியை என்னுடைய சகோதரி மற்றும் என்னை வைத்து ஷூட் செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. தற்போது உண்மையை தெரிந்து கொள்வோம். எஸ்.பி. பாலு காரு கலந்து கொண்ட எபிசோட் ஜூலை மாதம் 30ம் தேதி ஹேமசந்திரா, அனுதீப், பிரணவி, லிப்சிகா உள்ளிட்ட பல பாடகர்களுடன் ஷூட் செய்யப்பட்டது. ஜூலை 31ம் தேதி காருண்யா, தாமினி, சத்ய யாமினி, பவானி, மாளவிகா ஆகியோருடன் ஷூட் செய்யப்பட்டது. 

singer Malavika Pantula about SPB Rumors

இரண்டாவது நாள் நடந்த ஷூட்டிங்கில் கலந்து கொண்ட நான்கு பாடகிகளில் நானும் ஒருத்தி. எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்திருந்தால் என்னுடன் மேக்கப் அறையை ஷேர் செய்த மற்ற 3 பாடகிகள், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகியோருக்கும் எளிதில் பரவியிருக்கும். என் சகோதரி பாடகி இல்லை. அவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அப்படி இருக்கும்போது அவர் எப்படி அந்த நிகழ்ச்சியில் பாடியிருக்க முடியும்? . லாக்டவுன் துவங்கியதில் இருந்து என் கணவர் வீட்டில் இருந்து தான் வேலை செய்து கொண்டிருக்கிறார். என் வயதான பெற்றோர் கடந்த 5 மாதங்களாக காரிடருக்கு கூட செல்லாமல் வீட்டில் முடங்கியுள்ளனர். கொரோனா பிரச்சனையால் கடந்த 5 மாதங்களாக எங்கள் வீட்டிற்கு பணிப் பெண் கூட வருவது இல்லை. எனக்கு 2 வயதில் மகள் இருக்கிறார். நான் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டிருக்கிறேன். 

கடந்த 5 மாதங்களில் எந்த ரெக்கார்டிங்கிற்கோ அல்லது ஷூட்டிங் -கிற்காகவோ நான் வெளியே செல்லவில்லை. இந்த டிவி நிகழ்ச்சிக்காகத் தான் முதல்முறையாக வெளியே சென்றேன். அதுவும் என் காரில் டிரைவருக்கும் எனக்கும் இடையே ஷூல்டு வைத்திருந்தேன். அந்த அளவுக்கு நான் எச்சரிக்கையுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Atas Artikel

Ads Tengah Artikel 1

Ads Tengah Artikel 2

Ads Bawah Artikel