Cinema News
Prime News
Suriya
Saturday, August 22, 2020
0
சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. சூர்யா-வின் 2D என்டர்டையின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தில் மோகன் பாபு, அபர்ணா பாலமுரளி, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.ஜீவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், மே மாதமே இப்படம் வெளியாகவிருந்த இப்படம் கொரோனாவால் தடைப்பட்டது.
இந்நிலையில் எப்போது இந்த படம் வெளியாகுமென ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நிலையில், தற்போது படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் ஒன்ற வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவான சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைம் OTT தளத்தில் வருகின்ற அக்டோபர் 30 -ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous article
Next article
Leave Comments
Post a Comment