ஆண்ட்ரியா நடித்துள்ள குறும்படம் 'லாக்டவுன்'! ஐ-போன் ஷூட்


 

ஆண்ட்ரியா நடிப்பில் ஆதவ் கண்ணதாசன் இயக்கியுள்ள குறும்படம் 'லாக்டவுன்'.

இந்த குறும்படம் முழுக்க முழுக்க ஐ-போனிலே எடுக்கப்பட்டுள்ள இந்த குறும்படம் தற்போது வெளியாகியுள்ளது. 3 நிமிடம் ஓடக்கூடிய இந்த குறும்படம் ஹாரர் கலந்த விழிப்புணர்வு படமாக அமைந்துள்ளது. இதுகுறித்து ஆண்ட்ரியா கூறியுள்ளதாவது, "ஆதவ் கண்ணதாசனை எனக்கு ஓராண்டுக்கும் மேலாகத் தெரியும். அவரிடம் நடிப்பை விட எழுத்தில் கவனம் செலுத்துமாறு நான் சொல்லிக் கொண்டே இருப்பேன். அதில்தான் அவரது உண்மையான திறமை இருக்கிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட ஆரம்ப நாட்களில் இந்தக் குறும்படம் குறித்து என்னிடம் ஆதவ் சொன்னார்.

Andrea Jeremiah
ஆனால், அப்போது நான் சமையலில் பிஸியாக இருந்தேன். ஒருவழியாக இப்போதுதான் இதற்கான நேரம் வந்தது. இதற்கான முழுக் காரணமும் ஆதவ் மட்டுமே. இப்படத்தின் சிறப்பம்சமே இது முழுக்க முழுக்க ஐபோனில் எடுக்கப்பட்டது. இதைச் செய்ய வேண்டுமென்று நான் நீண்ட நாட்களாக விரும்பினேன். ஆனால், தரம் குறித்த விஷயங்களில் நாம் சமரசம் செய்யமுடியாது என்பதால் அது கைகூடவில்லை. ஆனால் இப்போது நமக்கு வேறு வழியில்லை. 

எனவே இதை ஐபோனில் படம்பிடிக்க முடிவு செய்தோம். ஆனால் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வந்திருக்கிறது. இப்போது நடந்துகொண்டிருக்கும் விஷயத்தைப் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சொல்ல முயற்சி செய்திருக்கிறோம்'' எனவே கூறியுள்ளார்.




குறும்படம்:









செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்... 
மேலும் உடனடி செய்திகளுக்கு Subscribe to Film Crazy 

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Atas Artikel

Ads Tengah Artikel 1

Ads Tengah Artikel 2

Ads Bawah Artikel