பெண்கள் குடும்ப கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள்! - வரலட்சுமி

Varalaxmi Sarathkumar Latest Awareness Video



நடிகை வரலட்சுமி சரத்குமார் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதத்தில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Varalaxmi in Kanni Rasi
கொரோனா பயத்தால் உலகமே ஊரடங்கை கடைப்பிடித்துவரும் இந்த சூழலில், வீட்டில் உள்ள பெண்களுக்கு பல துன்புறுத்தல் நடைபெறுவதாக வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோவில் கூறியுள்ளதாவது, "இது பெண்களுக்காக குறிப்பிடும் ஒரு முக்கியமான விஷயம். பல பெண்கள் இந்த ஊரடங்கு நேரத்தில் குடும்ப கொடுமைகளை(domestic violenceஅனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அதில் இருந்து தப்பிக்க முடியாமல் வீட்டில் மாட்டி கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு உதவி எண் உள்ளது.

Screen Shot (Twitter video)
1800 102 7282 என்ற இந்த எண்ணை தொடர்பு கொண்டால் கண்டிப்பாக உதவி கிடைக்கும். உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் இந்த நம்பரை கொடுத்து உதவி செய்யுங்கள். இந்த விஷயம் வயது, செல்வாக்கு, படித்தவர், படிக்காதவர் என்பது பார்த்து வரக் கூடிய விஷயமல்ல. இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். எந்தப் பெண்களுக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே உடனடியாக இந்த எண்ணை அனைவருக்கும் பகிருங்கள்" என கூறியுள்ளார்.

Twitter Feed:







செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்... 
மேலும் உடனடி செய்திகளுக்கு Subscribe to Film Crazy 

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Atas Artikel

Ads Tengah Artikel 1

Ads Tengah Artikel 2

Ads Bawah Artikel