தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்!

Dulquer Salmaan apologises for ‘Prabhakara’ joke


மலையாள நடிகர் துல்கர் சல்மான் தமிழ் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார்.

Varane Avashyamund Poster

மலையாளத்தில் துல்கர் சல்மான், கல்யாணி ப்ரியதர்ஷன், சுரேஷ் கோபி மற்றும் ஷோபனா நடிப்பில் வெளியான திரைப்படம் 'வரனே அவஷ்யமுண்டு'. அனுப் சத்யன் இயக்கியுள்ள இப்படம் டிஜிட்டல் தளங்களில் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஈழத்தலைவர் பிரபாகரன் அவர்களின் பெயரை அவமதிக்கும் விதமாக காட்சியொன்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் துல்கர் சல்மான் உள்ளிட்ட அப்படக்குழுவினரை இணையத்தில் தீட்டித் தீர்த்தனர்.

Dulquer Salmaan & Kalyani Priyadarshan 

இதனையறிந்த துல்கர் சல்மான் இதுகுறித்து மன்னிப்புக் கேட்டு விளக்கவுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, "வரனே அவஷ்யமுண்டு படத்தில் வரும் பிரபாகரன் காமெடி காட்சி தமிழ் மக்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாகச் சிலர் என் கவனத்துக்கு கொண்டு வந்தனர். உண்மையில் அது எந்தவித உள்நோக்கத்துடனும் வைக்கப்பட்டது அல்ல. பழைய மலையாள  திரைப்படமான பட்டண பிரவேசம் படத்தில் வரும் நகைச்சுவை காட்சி அது, மேலும் அது கேரளாவில் பயன்படுத்தப்படும் பொதுவான மீம். வேறெந்த உள்நோக்கமும், அவமதிக்கும் நோக்கிலும் வைக்கப்பட்டதில்லை.



Pic: Twitter(Dulquer)

மேலும், பிரபாகரன் என்பது கேரளாவில் ஒரு பொதுவான பெயர். எனவே, படத்தின் தொடக்கத்தில் குறிப்பிட்டது போல் அது யார் மனதையும் துன்புறுத்துவதற்காக அல்ல. இதனை எதிர்க்கும் பலரும் படத்தைப் பார்க்காமலேயே வெறுப்பைப் பரப்ப முயல்கின்றனர். என்னையோ, என்னுடைய இயக்குனர் அனூப்பையோ வெறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியும். இதை எங்கள் அளவில் வைத்துக் கொள்ளலாம். எங்கள் தந்தைகளையோ அல்லது மூத்த நடிகர்களையோ இதில் இழுக்க வேண்டாம்.
இதனால் காயப்பட்டதாக உணரும் அன்பான அனைத்துத் தமிழ் மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

என்னுடைய வார்த்தைகள் மூலமாகவோ படங்கள் மூலமாக யாரையும் காயப்படுத்த நினைத்ததில்லை. இது உண்மையில் ஒரு தவறான புரிதல். உங்களில் சிலர் எங்களை மட்டுமல்லாமல் எங்களது குடும்பத்தையும் சேர்த்து வன்மத்துடன் திட்டி, மிரட்டி, அவமானப்படுத்தி வருகிறீர்கள். இது நடந்திருக்க வேண்டாம் என்று விரும்புகிறேன்" என துல்கர் சல்மான் கூறியுள்ளார்.

Twitter Feed:







செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்... 
மேலும் உடனடி செய்திகளுக்கு Subscribe to Film Crazy 
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Atas Artikel

Ads Tengah Artikel 1

Ads Tengah Artikel 2

Ads Bawah Artikel