டிஜிட்டல் வெளியீடு என்பது தயாரிப்பளர்களின் முழு உரிமை! - தயாரிப்பாளார் T.சிவா

Popular Producer T.Siva about Ponmagal Vandhal Issue

'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் தொடர்பாக உருவாகியுள்ள பிரச்சனைக்கு பிரபல தயாரிப்பாளர் T.சிவா ஆதரவு தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் 2D என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்மகள் வந்தாள்'. அறிமுக இயக்குனர் ஜே.ஜே.பிரடரிக் இயக்கியுள்ள இப்படத்தில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசிற்கு தயாராகி இருந்தது. 

Ponmagal Vandhal Movie Poster

இந்நிலையில் கொரோனா பாதிப்பால் உலகமே ஊரடங்கில் இருந்து வருவதால் பல தொழில்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. அந்த வகையில் சினிமா தொழிலும் விதிவிலக்கல்ல. மார்ச், ஏப்ரலில் வெளியாகவிருந்த பல படங்கள் தற்போது தள்ளிபோய் காத்துக்கொண்டிருக்கிறது. அப்படங்களின் தயாரிப்பாளர்களும் விழிபிதுங்கி தவித்து வருகின்றனர். இதனை உணர்ந்து சரியான நேரத்தில் உஷாரானா முடிவை எடுத்துள்ளார் சூர்யா. பொன்மகள் வந்தாள் படத்தை நேரடி வெளியீடாக அமேசான் பிரைமில் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர். 

இதனை தியேட்டர் உரிமையாளர்கள் பலரும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் T.சிவா தனது ஆதரவை சூர்யா தரப்பிற்கு தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, "இதுக்குறித்த பிரச்சனையை மீடியாவிற்கு கொண்டுசெல்லாமல் ஏதேனும் வரைமுறைகள் வைத்துக் கொண்டு செயல்படலாம். விவாதிப்போம் என்று எவ்வளவோ சொன்னேன். அதற்குச் செவி சாய்க்கவில்லை. இப்போது விவாதத்துக்குரிய விஷயமாகிவிட்டது. மேலும், இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் சிறிய முதலீட்டு படங்களுக்கு தகுந்த தீர்வாக டிஜிட்டல் தளங்கள் அமைந்துள்ளது. 

Producer T.Siva

திரையரங்க உரிமையாளர்களும் நீண்ட கால அனுபவம் கொண்டவர்கள். இந்த விஷயத்தைச் சுமுகமாகப் பேசி முடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். திரைத்துறையில் இருக்கும் பெரியவர்கள் அனைவருமே முன்வந்து இதை முக்கியமான விஷயமாக எடுத்துக்கொண்டு செய்ய வேண்டும். டிஜிட்டல் வெளியீடு என்பது தயாரிப்பாளரின் 100% உரிமை. அதிலிருந்து தப்பிக்க முடியுமானால் வந்துவிட வேண்டும். ஆகையால் இந்த விஷயத்தில் தனிப்பட்ட பெயரைப் போட்டு யாரையும் தாக்காதீர்கள். நாம் இல்லாமல் திரையரங்க உரிமையாளர்கள் இல்லை. அவர்கள் இல்லாமல் நாம் இல்லை. நிச்சயமாகப் புரிந்து கொள்வார்கள்" என கூறியுள்ளார்.



செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்... 
மேலும் உடனடி செய்திகளுக்கு Subscribe to Film Crazy 
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Atas Artikel

Ads Tengah Artikel 1

Ads Tengah Artikel 2

Ads Bawah Artikel