'திரிஷ்யம் 2' படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த மோகன்லால்!




மோகன் லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013 -ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திரிஷ்யம்.

Mohan Lal
கிரைம் திரில்லராக வெளியான இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது மட்டுமில்லாமல் தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் பெயரிலும் மற்றும் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தில் மோகன் லாலுடன் மீனா, அன்சிபா ஹாசன், பேபி எஸ்தெர், கலாபவன் ஷாஜன், சித்திக், ஆஷா சாரதி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக போவதாக செய்திகள் வெளியாகியது. 

Drishyam Movie Stills
அந்த செய்தியை தற்போது மோகன் லால் உறுதிப்படுத்தியுள்ளார். மோகன் லால் பிறந்தநாளான இன்று அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக  'திரிஷ்யம் 2' படத்தை ப்ரோமோ வீடியோவுடன் உறுதிப்படுத்தியுள்ளார். 

வீடியோ:






Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Atas Artikel

Ads Tengah Artikel 1

Ads Tengah Artikel 2

Ads Bawah Artikel