Cinema News
Prime News
Trisha
இந்தியாவின் சிறந்த நடிகர்கள் இவர்கள் தான்! த்ரிஷா பதில்
Thursday, May 21, 2020
0
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை த்ரிஷா, மௌனம் பேசியதே படத்தின் மூலம் அறிமுகமாகிய த்ரிஷா, அதன்பின் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.
தற்போது த்ரிஷா நடிப்பில் பரமபத விளையாட்டு, ராங்கி, கர்ஜனை ஆகிய படங்கள் வெளியாகவுள்ள நிலையில், மோகன்லாலுடன் ராம் மற்றும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் ஆகிய பெரிய படங்களிலும் நடித்து வருகிறார். ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நேரத்தில் நடிகைகள் அனைவரும் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலே குடியிருக்க ஆரமித்து விட்டார்கள். அந்த வகையில் இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டிங்கில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் த்ரிஷா, அப்போது உங்கள் பார்வையில் இந்தியாவின் தலைசிறந்த 3 நடிகர்கள் யார்? என ஒரு ரசிகர் கேட்க, அதற்கு பதிலளித்த த்ரிஷா கமல்ஹாசன், மோகன்லால் மற்றும் அமிர்கான் என பதிலளித்துள்ளார்.
![]() |
Trisha Krishnan |
Previous article
Next article
Leave Comments
Post a Comment