ஜி.வி.பிரகாஷ் & கௌதம் மேனன் இணையும் புதிய படம்!




இசையமைப்பாளராக துவங்கி தற்போது கதாநாயகனாக நடித்து வருபவர் ஜி.வி.பிரகாஷ்.



டார்லிங் படத்தின் மூலம் துவங்கிய இவரது நடிப்பு பயணம், குறுகிய காலத்திற்குள் ஏகப்பட்ட படங்களில் நடித்து முடித்து விட்டார். இன்னும் அரை டஜன் படங்கள் படப்பிடிப்பிற்கும், வெளியீட்டிற்கும் காத்திருக்கின்றன. இந்நிலையில் தற்போது DG ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் மதிமாறன் இயக்கவுள்ள புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் வில்லனாக இயக்குனர் கௌதம் மேனன் ஒப்பந்தமாகியுள்ளார், கதாநாயகியாக வர்ஷா போலம்மா ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், இப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வை விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கௌதம் மேனன் சமீபத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Atas Artikel

Ads Tengah Artikel 1

Ads Tengah Artikel 2

Ads Bawah Artikel