Cinema News
Meera Chopra
Prime News
தமிழில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக, அன்பே ஆருயிரே படத்தில் நிலா என்ற பெயரில் அறிமுகமானவர் நடிகை மீரா சோப்ரா.
இப்படத்தையடுத்து ஜாம்பவான், லீ, மருதமலை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தமிழ் படங்களை போல் தெலுங்கு, கன்னடம் மற்றும் சில ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். ஆனாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படங்களோ, கதாப்பாத்திரமும் அமையவில்லை. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வபோது தனது ஹாட் படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார். இந்நிலையில் பிரியங்கா சோப்ராவின் உறவினரான இவர் டெல்லியை சேர்ந்தவர். இவரது, தந்தை வாக்கிங் சென்றபோது, சிலர் வந்து அவரை கத்திமுனையில் மிரட்டி சிலர் வழிப்பறி செய்ததாக, மீரா சோப்ரா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதுக்குறித்து அவர் கூறியுள்ளதாவது, "எனது அப்பா, போலீஸ் காலனியில் வாக்கிங் சென்றுகொண்டிருந்தபோது, ஸ்கூட்டரில் வந்த இரண்டு பேர், கத்தியைக் காட்டி மிரட்டி அவரது செல்போனை பறித்துச் சென்றுவிட்டனர். இதுதான் டெல்லியின் பாதுகாப்பாக இருக்கிறது" என்று கூறியது மட்டும்மிலாமல் இதை டெல்லி காவல்துறை, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு டேக் செய்து பதிவு செய்தார்.
பிறகு இதுகுறித்து அவர் தந்தை செய்திருந்த புகாரின் எஃப்.ஐ.ஆர் எண்ணையும் பகிர்ந்து, காவல்துறைக்கு நன்றி தெரிவித்துள்ள மீரா, "உடனடியாக நடவடிக்கை எடுத்த வடக்கு டெல்லி காவல்துறைக்கு நன்றி. காவல்துறையால் பாதுகாக்கப்படும் போது பெருமையாக இருக்கிறது. திருடப்பட்ட பொருள் முக்கியமானது அல்ல. பெரியவர்களைப் பாதுகாப்பது முக்கியம்" என்று தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகையின் தந்தையிடம் கைவரிசையைக் காட்டிய வழிப்பறி கும்பல்!
Wednesday, May 6, 2020
0
![]() |
Meera Chopra 's father mugged at Knife point |
தமிழில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக, அன்பே ஆருயிரே படத்தில் நிலா என்ற பெயரில் அறிமுகமானவர் நடிகை மீரா சோப்ரா.
![]() |
Meera Chopra Stills |
இதுக்குறித்து அவர் கூறியுள்ளதாவது, "எனது அப்பா, போலீஸ் காலனியில் வாக்கிங் சென்றுகொண்டிருந்தபோது, ஸ்கூட்டரில் வந்த இரண்டு பேர், கத்தியைக் காட்டி மிரட்டி அவரது செல்போனை பறித்துச் சென்றுவிட்டனர். இதுதான் டெல்லியின் பாதுகாப்பாக இருக்கிறது" என்று கூறியது மட்டும்மிலாமல் இதை டெல்லி காவல்துறை, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு டேக் செய்து பதிவு செய்தார்.
![]() | |
|
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்...
மேலும் உடனடி செய்திகளுக்கு Subscribe to Film Crazy
Previous article
Next article
Leave Comments
Post a Comment