Cinema News
Pragathi
Prime News
மூத்த காமெடி நடிகரால் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்! நடிகை பிரகதி
Wednesday, May 6, 2020
0
![]() |
Pragathi recalls senior comedian's misbehavior with her |
மூத்த காமெடி நடிகரால் பாலியல் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் என்று நடிகை பிரகதி பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
பாக்யராஜின் வீட்ல விசேஷங்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரகதி. இப்படத்தைத் தொடர்ந்து பெரிய மருது, பாண்டியனின் ராஜ்யத்தில், சும்மா இருங்க மச்சான், புதல்வன் உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்தார். பிறகு ஜெயம், சிலம்பாட்டம், கெத்து, தாரை தப்பட்டை என பல படங்களில் கதாப்பாத்திர நடிகையாக நடித்துள்ளார்.
இந்நிலையில் பிரகதி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், "தெலுங்கு சினிமாவில் மூத்த காமெடி நடிகர் ஒருவர் என்னிடம் பாலியல் ரீதியாக தவறான முறையில் நடந்த சம்பவத்தை எதிர்கொண்டேன். முதலில் அந்த நடிகர் நன்றாகதான் பழகினார், பிறகு ஒரு படப்பிடிப்பில் இருவரும் சேர்ந்து நடித்துக் கொண்டு இருந்தபோது அவரது பேச்சும் செயலும் தவறான விதத்தில் இருந்தது. போகப்போக பாலியல் ரீதியாக மோசமாக அவர் நடந்து கொள்வதை உணர்ந்தேன்.
ஒரு கட்டத்திற்கு மேல் அவர் தொந்தரவை தாங்க முடியவில்லை. இதனால் அவரை எனது கேரவனுக்குள் அழைத்து உங்கள் நடவடிக்கை ரொம்ப கேவலமாக இருந்தது. தவறான முறையில் என்னை அணுகும்படி சிக்னல் கொடுத்தேனா அல்லது எனது உடல்மொழி உங்களை அழைப்பதுபோல் இருந்ததா? படப்பிடிப்பிலேயே உங்களை திட்டி இருப்பேன். உங்களுக்கு இருக்கும் மரியாதையை கருத்தில் கொண்டு தனியாக அழைத்து சொல்கிறேன் என்றேன். அதன்பிறகு அவர் என்னிடம் மோசமாக நடக்கவில்லை” என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பாக்யராஜின் வீட்ல விசேஷங்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரகதி. இப்படத்தைத் தொடர்ந்து பெரிய மருது, பாண்டியனின் ராஜ்யத்தில், சும்மா இருங்க மச்சான், புதல்வன் உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்தார். பிறகு ஜெயம், சிலம்பாட்டம், கெத்து, தாரை தப்பட்டை என பல படங்களில் கதாப்பாத்திர நடிகையாக நடித்துள்ளார்.
![]() |
Pragathi |
Previous article
Next article
Leave Comments
Post a Comment