கஜானாவை நிரப்ப நல்ல வழிகளைப் பாருங்கள் - ரஜினிகாந்த்




கொரோனா ஆபத்தால் நாடெங்கும் ஊரடங்கு கடந்த இரு மாதங்களாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


தனி மனித இடைவெளி, முக கவசம் அணிய வலியுறுத்தல் என இருந்த நம் அரசின் போக்கு தற்போது மதுக்கடைகளை திறப்பதில் நகர்கிறது. கடந்த 7 ஆம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் விளைவு இத்தனை நாட்கள் கடைப்பிடிக்கப்பட்டு வந்த தனிமனித இடைவெளிக்கு அர்த்தமில்லாமல் போனது. பலரும் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களில் ஈடுபடத் துவங்கினர்.

Rajinikanth
கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் உள்ளிட்ட பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர, வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகள் மூடும்படி அரசிற்கு உத்தரவிட்டது. யப்பா! என பெருமூச்சி அடங்குமுன்பே மேல்முறையீட்டிற்கு தயாரானது தமிழக அரசு. இந்நிலையில் இதுக்குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, "இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை _நிரப்ப_ நல்ல_ வழிகளை_பாருங்கள்" எனக் கூறியுள்ளார்.








செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்... 
மேலும் உடனடி செய்திகளுக்கு Subscribe to Film Crazy 




Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Atas Artikel

Ads Tengah Artikel 1

Ads Tengah Artikel 2

Ads Bawah Artikel