Cinema News
Prime News
Rashmika Mandanna
ஊரடங்கு முடிந்த பிறகு ராஷ்மிகா எடுத்துள்ள முடிவு!
Thursday, May 7, 2020
0
![]() |
Rashmika Mandanna 's Decisions after Curfew |
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வர துவங்கியுள்ளார் ராஷ்மிகா மந்தன்னா.
கன்னட நடிகையான இவர் 'கீதா கோவிந்தம்' படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களால் கொண்டாடக்கூடிய நடிகையாக மாறியுள்ளார். இதன்பிறகு மகேஷ் பாபுவுடன் 'சரிலேறு நீக்கெவரு', நிதினுடன் பீஷ்மா உள்ளிட்ட படங்களில் நடித்தார் இந்த படங்களும் ஹிட் அடிக்க தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறியுள்ளார். கூடவே சம்பளத்தையும் தாறுமாறாக உயர்த்தியுள்ளார். தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'புஷ்பா' படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ள ராஷ்மிகா, இப்படத்தின் சம்பளமாக ஒரு கோடிக்கும் அதிகமாகவே வாங்கியுள்ளார்.
இந்நிலையில் தற்போது நிலவிவரும் ஊரடங்கு உத்தரவால் திரையுலகம் செயல்பட முடியாமல் திண்டாடிப்போய் போயுள்ளது. முன்னணி நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைத்து கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை தமிழ், தெலுங்கு சினிமா வட்டாரங்களில் எழுந்துள்ளது. இதனால் ராஷ்மிகாவும் தனது சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளதாம். இதனை கருத்தில் கொண்டு ஊரடங்கு முடிந்து நிலைமை சீரானபின் தான் நடிக்க ஒப்புக்கொள்ளும் படங்களில் சம்பளத்தை மீண்டும் கணிசமாக உயர்த்த ராஷ்மிகா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
![]() |
Rashmika Mandanna Stills |

Previous article
Next article
Leave Comments
Post a Comment