Cinema News
Prime News
Tom Cruise
நாசாவுடன் இணைந்து விண்வெளியில் உருவாகும் டாம் குரூஸ் படம்!
Thursday, May 7, 2020
0
![]() |
Tom Cruise Next film with NASA |
ஹாலிவுட்டில் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான டாம் குரூஸ் நடிப்பில் முழுக்க முழுக்க விண்வெளியில் ஒரு திரைப்படம் தயாராகவுள்ளது.
மிஷன் இம்பாசிபிள் சீரிஸ் நாயகன் டாம் குரூஸிற்கு உலகமுழுக்க ரசிகர் பட்டாளம் உண்டு. 57 வயதான இவர் படத்தின் ஸ்பெஷலே இவரின் ரிஸ்க்கான சண்டைக் காட்சிகள் தான். அந்த அளவிற்கு தத்ரூபமாகவும், விறுவிறுப்புடனும் இருக்கும் இவரின் படங்கள். அந்த வரிசையில் ரசிகர்களுக்கு தற்போது மேலும் ஒரு மேஜிக்கை நிகழ்த்தவுள்ளார் டாம். தனது அடுத்தப் படத்தின் ஷூட்டிங்கை விண்வெளியில் நடத்த இருப்பதாகவும் இதுபற்றி அமெரிக்க பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. ஸ்பேஸ் எக்ஸ் (Space X) நிறுவனர் எலன் மஸ்க் நிறுவனத்துக்கு சொந்தமான விண்வெளி நிலையத்தில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற இருப்பதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
![]() |
Tom Cruise |
![]() |
Tom Cruise in Mission Impossible |
பூமியிலிருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் சுற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இதை படமாக்கத் டாம் குரூஸ் திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக 'நாசா'வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அந்த செய்திகளில் கூறப்பட்டுள்ளது. இது அதிரடி கலந்த ஆக்ஷன் படமாகவும் விண்வெளியில் படமாக்கப்படும் முதல் படமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுக்குறித்து நாசா நிர்வாகி பகிர்ந்துள்ளதாவது, "விண்வெளி நிலையத்தில் டாம் குரூஸுடன் இணைந்து பணியாற்றுவதில் நாசா உற்சாகமாக இருக்கிறது. நாசாவின் லட்சியத் திட்டங்களை நனவாக்குவதற்காக புதிய தலைமுறை பொறியாளர்களையும் விஞ்ஞானிகளையும் ஊக்குவிக்க பிரபலமான மீடியா தேவை" என்று தெரிவித்துள்ளார்.
Previous article
Next article
Leave Comments
Post a Comment