Cinema News
Prime News
Reshma Pasupuleti
புஷ்பா புகழ் ரேஷ்மாவின் லேட்டஸ்ட் வைரல் ஹாட் வீடியோ
Wednesday, May 6, 2020
0
![]() |
Reshma Pasupuleti Latest Viral Video |
சின்னத்திரை தொகுப்பாளராக அறிமுகமான ரேஷ்மா அதைத் தொடர்ந்து, வாணி ராணி, மரகதவீணை உள்ளிட்ட தொடர்களில் நடித்தார்.
வளர்ச்சியின் அடுத்தக்கட்டமாக வெளித்திரையில் 'மசாலா' என்கிற படம் மூலம் அறிமுகமானார். ஆனால் அப்படத்தின் மூலம் கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே. இப்படத்தை தொடர்ந்து 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படம் இவரின் சினிமா வாழ்கையை மாற்றி அமைத்தது. இப்படத்தில் புஷ்பா என்கிற இவரது கதாப்பாத்திரமும், புஷ்பா புருஷன் என்கிற சூரியின் காதாப்பாத்திரமும் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானது.
இதைத்தொடர்ந்து கோ 2, மணல் கயிறு 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மீண்டும் பெரியத் திருப்பமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளிச்சமடைந்தார். எனினும் சொல்லிக்கொள்ளும் அளவு இன்னும் படவாய்ப்புகள் வராத நிலையில் சோசியல் மீடியாவில் தற்போது வலம்வந்து கொண்டிருக்கிறார். விதவிதமாக போட்டோஷூட்கள், பல சமயங்களில் ஹாட்டான படங்கள், வீடியோ ஆகியவற்றை வெளியிட்டு வைரலாக்குவார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள கவர்ச்சி டிக்-டாக் வீடியோவில், குட்டை உடையில் டாப் ஆங்கிளில் தாரளமாக கவர்ச்சி காட்டியுள்ளார் ரேஷ்மா. தற்போது அந்த வீடியோ வைரலானது மட்டுமில்லாமல் லைக்குகளையும் குவித்து வருகிறது.
ரேஷ்மா டிக்டாக் வீடியோஸ்:
![]() |
Reshma Pasupuleti |
ரேஷ்மா டிக்டாக் வீடியோஸ்:
Previous article
Next article
Leave Comments
Post a Comment