Cinema News
Prime News
Ritika Singh
துணி துவைப்பதிலும் பாக்சிங்கா! ரித்திகாவின் வைரல் வீடியோ
Saturday, May 16, 2020
0
இறுதிச்சுற்று படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். பாக்சிங் வீரரான இவருக்கு முதல் வாய்ப்பே இந்தியா முழுவதும் பிரபலமாக்கியது.
அதைத் தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா மற்றும் சமீபத்தில் வெளியான ஓ மை கடவுளே உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஊரடங்கு நேரம் என்பதால் நடிகைகள் பலரும் வீட்டு வேலை செய்வது, உடற்பயிற்சி, யோகா என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை நிரப்பி வரும் நிலையில், ரித்திகா வெளியிட்டுள்ள ஃபன் வீடியோ சுவாரஸ்யமாக அமைந்துள்ளது. ரித்திகா சிங் தனது இன்ஸ்டா பக்கத்தில், எப்படி துணி துவைக்கவேண்டும் என்று அம்மா ஆசைப்படுவார், ஆனால் உண்மையில் நான் எப்படி துவைப்பேன் என குறிப்பிட்டு இரண்டு வீடியோக்களை வெளியிட்டுள்ளார். முதல் வீடியோவில் அமைதியாக துணியினை கீழே வைத்து சோப்பு போட்டு துவைக்கிறார், இரண்டாவது வீடியோவில் வெறித்தனமாக அந்த துணியினை தூக்கி போட்டு அடித்து துவைக்கிறார் ரித்திகா. காமெடியாக அமைந்துள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
வீடியோ:
![]() |
Ritika Singh |
வீடியோ:
Previous article
Next article
Leave Comments
Post a Comment