Cinema News
Prime News
Suriya
சூர்யாவிற்கு நன்றியை தெரிவித்த மதுரை எம்பி!
Tuesday, May 12, 2020
0
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள
ஊரடங்கில் பொருளாதார ரீதியாக பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை மக்களின்
வாழ்வாதாரம் பெரிதும் பாதிபிற்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் மதுரை எம்பியான
வெங்கடேசன், ‘அன்னவாசல்’ என்கிற திட்டத்தின் மூலம் மதுரையில் பசியால் தவிக்கும்
மக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார்.
இதற்கு வழுமிக்க பலரும் நிதியுதவி
வழங்கி வருகின்றனர், அந்த வகையில் நடிகர் சூர்யா தனது பங்கிற்கு ரூ.5 லட்சம்
நிதியுதவி வழங்கியுள்ளார். இதுக்குறித்து வெங்கடேசன் கூறியுள்ளதாவது, “நல்ல
முன்னெடுப்புக்கள் பல நல்ல உள்ளங்களை ஒருங்கிணைத்துக் கொண்டே நகரும். அப்படியான
நகர்வில், தன் பங்களிப்பாக 5 இலட்சம்
நன்கொடையாக அன்னவாசலில் சோறூட்ட அளித்த சூர்யாவுக்கு நன்றி. ஆற்றுவார் ஆற்றல்
பசியாற்றல்" என்பது வள்ளுவன் மொழி. 'அகரம்' மூலம் ஏழை மக்களின் கல்விப் பசி ஆற்றி வருபவர் திரைக்கலைஞர் சூர்யா.
இப்போது 'ஆகாரம்' மூலம் அன்னவாசல் வழி
வந்து விளிம்பு நிலை மனிதரின் பசியாற்றவும் முன்வந்துள்ளார். அவருக்கு எனது
நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
Previous article
Next article
Leave Comments
Post a Comment