Cinema News
Prime News
Tamannaah
முன்னணி நடிகர் படத்தில் நடிக்க மறுத்த தமன்னா! காரணம் இதுதானா?
Friday, May 15, 2020
0
'கேடி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதன்பின் தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு என அனைவருடனும் ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல நடித்துள்ளார்.
தமிழில் தமன்னா நடிப்பில் ஆக்ஷன், பெட்ரோமாக்ஸ் ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியானது. இதைத் தொடர்ந்து ஹிந்தியில் நவாசுதீன் சித்திக்-குடன் சுடியான் என்கிற படத்திலும், தமிழில் விகடன் தயாரிக்கும் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்துள்ளார் தமன்னா. இந்நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ரவி தேஜா படத்தில் நடிக்க தமன்னாவிடம் பேசியுள்ளனர், ஆனால் இப்படத்தில் நடிக்க வேண்டுமென்றால் ரூ.3 கோடியை சம்பளமாக கேட்டுள்ளார். இதைக் கேட்ட தயாரிப்பு தரப்பு தலைத்தெறிக்க ஓடியதாகவும் தகவல்கள் வெளியாகிவுள்ளது. ஏற்கனவே ரவி தேஜாவுடன் தமன்னா 'பெங்கால் டைகர்' என்கிற ஜோடி சேர்ந்து நடித்துள்ளார், படமும் ஹிட் தான் இருந்தும் ஏன் தவிர்த்தார்? என்கிற கேள்வி தெலுங்கு திரையுலகில் முனுமுனுக்க படுகிறது.
![]() |
Ravi Teja & Tamannaah in Bengal Tiger Movie |
Previous article
Next article
Leave Comments
Post a Comment