அது கவினை பற்றிய பதிவில்லை! லாஸ்லியா மறுப்பு



செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் புகழ் மூலம் தற்போது கதாநாயகியாக மாறியிருப்பவர் லாஸ்லியா.

Losliya Mariyanesan
பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா பிரபலமாக முக்கிய காரணம் கவின், இருவருக்குமான நட்பு, காதல் என்ன என்பது நாடறிந்த விஷயம். இது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் லாஸ்லியா பதிவிட்ட பதிவு பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவின் பதிவு போலவே, புகைப்படத்துடன் "வாழ்க்கை நமக்கு எதோ சொல்லித்தர விரும்புகிறது. அதனால் உங்களது தவறுகளை ஏற்று கொள்ளுங்கள், உங்களை கொஞ்சம் கண்ணாடியில் பாருங்கள்" எனவும் லாஸ்லியா கூறி இருந்தார். 

Kavin - Losliya
இது பரப்பரப்பை ஏற்படுத்த அதுக்கு விளக்கம் அளித்துள்ளார் லாஸ்லியா, அவர் கூறியுள்ளதாவது, "வணக்கம், எல்லோரும் பாதுகாப்புடன் இருக்கிறீர்கள் என நம்புகிறேன். தயவு செய்து ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், இது என்னுடைய இன்ஸ்டாகிராம். இதுல நான் போடுற captions அல்லது போட்டோக்கள் எல்லாமே என்னை பற்றியது தான். 'only about me'. எனக்கு பின்னால் பேசுவது பிடிக்காது. அதனால் நீங்கள் எதாவது ஒன்றை பற்றி பேச விரும்புகிறீர்கள் என்றால், தற்போது இருக்கும் நிலைமை பற்றி பேசுங்கள். நன்றி. கருணையுடன் இருங்கள்" என கூறியுள்ளார்.



Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Atas Artikel

Ads Tengah Artikel 1

Ads Tengah Artikel 2

Ads Bawah Artikel