42 வயதில் அம்மாவான விஜய் - அஜித் பட நடிகை !



'தல' அஜித்துடன் அமராவதி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சங்கவி. (இப்படத்தில் தான் அஜித்தும் அறிமுகம்).

Sanghavi
இப்படத்தைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் வந்தார். மிகப்பெரிய புகழ் இல்லையென்றாலும் 90's ரசிகர்களின் கனவு(கவர்ச்சி) கன்னிகளில் ஒருவராக திகழ்ந்தார். ரஜினிகாந்த்(பாபா), கமல்ஹாசன்(பஞ்சதந்திரம்), விஜயகாந்த், சரத்குமார், விஜய் மற்றும் அஜித் என முன்னணி நடிகர் பெரும்பாலானோர் படத்தில் நடித்துள்ளார். நாளடைவில் சினிமா வாய்ப்பு குறைய சீரியலில் நடிக்க துவங்கினார்.


Sanghavi wwith his Husband

கடந்த 2016 -ஆமா ஆண்டு வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு  பெங்களூருவில் செட்டில் ஆனார். 39 வயதில் திருமணம் செய்துகொண்ட சங்கவி, 42 வயதில் தாயாகியுள்ளார். சங்கவிக்கு தேவதையாக பெண் குழந்தை பிறந்துள்ளது, மேலும் முதன்முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Pic: Instagram


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Atas Artikel

Ads Tengah Artikel 1

Ads Tengah Artikel 2

Ads Bawah Artikel