Cinema News
Nivetha Pethuraj
Prime News
இது என்னுடையது அல்ல! நிவேதா பெத்துராஜ் விளக்கம்
Monday, May 4, 2020
0
![]() |
Nivetha Pethuraj announces her official twitter handle |
'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.
இப்படத்தைத் தொடர்ந்து டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது தன் பெயரில் உள்ள போலி டுவிட்டர் அக்கவுன்ட் குறித்து ரசிகர்களிடம் வேண்டுகோள் அளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, "@nivetha_tweets என்கிற டுவிட்டர் கணக்கு தான் என்னுடைய அதிகாரப்பூர்வ கணக்கு, எனது பெயரில் பல போலி கணக்குகள் உள்ளது. எனவே அவற்றை நீக்க டுவிட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போதைய சூழலில் என்னுடைய ஐடியை அதிகாரபூர்வ வெரிஃபிகேஷன் செய்வதற்கும் தாமதம் ஆகலாம். அதனால் இந்த ஐடியை மட்டும் பின்தொடருங்கள்" என அவர் கூறியுள்ளார்.
![]() |
Nivetha Pethuraj Stills |
Twitter Feed:
Previous article
Next article
Leave Comments
Post a Comment