பூமிகா திரைப்பட விமர்சனம் | Boomika Movie Review
பூமிகா திரைப்பட விமர்சனம்
படக்குழு:
நடிகர்கள்: ஐஸ்வர்யா ராஜேஷ், அவந்திகா, பாவல் நவகீதன் மற்றும் பலர்.
இசை: ப்ரித்வி சந்திரசேகர்
ஒளிப்பதிவு: ராபர்டோ சஸ்ஸாரா
எடிட்டிங்: ஆனந்த் ஜெரால்டின்
தயாரிப்பு: ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ், பேஷன் ஸ்டுடியோஸ்
இயக்கம்: ரதிந்திரன் பிரசாத்
OTT: நெட்பிலிக்ஸ்(Netflix).

கதைச்சுருக்கம்::
படத்தின் துவக்க காட்சி நாகப்பட்டினத்தில் பிரசவத்திற்காக அம்மா வீட்டிற்கு வந்த பெண் ஒருவர், தனது கணவரிடம் போனில் சில விஷயங்களை பேசுகிறார். கார் ஒட்டிக்கொண்டே போன் பேசியதால் விபத்து ஒன்றில் சிக்கி சம்பவ இடத்திலேயே கணவன் உயிரிழக்கிறான். கட் செய்தால் ஊட்டியில் குழந்தைகளுக்கு கவுன்சிலிங் செய்யும் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், அவரது கணவன் பெரிய பில்டிங்
ப்ராஜக்ட் விஷயமாக அலைந்து கொண்டிருக்கிறார். ஒருக் கட்டத்தில் அது கிடைத்துவிட, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆர்க்கிடெக்ட் தோழி மற்றும் தங்கையுடன் நாயகன் அந்த ப்ராஜக்ட் செய்யும் இடத்திற்கு செல்கிறான். அந்த இடம் ஒரு காலத்தில் பிரபலமான பள்ளிக்கூடமாக இருந்துள்ளது, பிறகு என்ன? வேலைக்காக சென்ற அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை? அதற்கு காரணம் பேயா? இல்லை ஆசாமியா?
என முடிவதே மீதிக்கதை.

FC விமர்சனம்:
பூமிகா, இப்படம் நேரடி ஒளிப்பரப்பாக விஜய் டிவியில் இன்று(ஆகஸ்ட் 22) மதியம் வெளியானது, நாளை நெட்பிலிக்ஸ் OTT தளத்திலும் வெளியாகவுள்ளது. படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், (இப்படத்தில் நாயகன், நாயகி என்றெல்லாம் சொல்ல முடியாது, எல்லாருக்கும் சமமான கதைப்பாத்திரங்கள் தான், எனினும் எளிதாக புரிய குறிப்பிடுகிறேன்). ஐஸ்வர்யா ராஜேஷிற்கு பெரிதளவு நடிப்பு தரும் காட்சிகள் இல்லை என்றாலும் இந்த கதைக்கு என்ன அளவோ அதை அழகாக நடித்து கொடுத்துள்ளார். அதேபோல் நாயகன், அவரது தோழி, தங்கை மற்றும் வேலைக்காரனாக வரும் பாவல் நவகீதன் அவர்களுக்கான பாத்திரங்களை நிறைவாக செய்துள்ளனர். இவர்களை விட பூமிகா, டைட்டில் பாத்திரத்தில் வரும் அந்த இளம் வயது பெண் அவந்திகா மனதில் நிற்கிறாள்.

பேய், மலை, இயற்கை என்றாலே ஒளிப்பதிவு தான் முதல் தூண், இப்படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் மிக நேர்த்தியாகவும், உணர்வுபூர்வமாகவும் அமைந்ததுள்ளது. படத்தின் தரத்தை தூக்கி நிற்ப்பது ஒளிப்பதிவு மட்டும்தான். இப்படத்தை பொறுத்தவரை எடுத்துக்கொண்ட கருத்து பாராட்டுக்குரியது தான், அதற்கான வசனங்களும் அருமையாக அமைந்துள்ளது. ஆனால், ஒரு படத்திற்கு இது மட்டும் போதுமா? திரைக்கதை மிக முக்கியம். ஆனால் இப்படத்தில் சொதப்பலே அங்கு தான், பேய் படம்னு நினைத்து சில காட்சிகள், உண்மையில் பேய்க்கு உண்டான மரியாதையே போய்விட்டது. அந்த அளவிற்கு பேயை வைத்து விளையாடியுள்ளார்கள். நல்ல களம், நல்ல லொகேஷன் திரில்லர் கட்சிகளாம் எப்படி எடுத்திருக்கலாம்! கோட்டைவிட்டுள்ளனர்.

இப்படத்தில் பூமிகா மற்றும் வேலைக்காரராக வரும் பாவல் நவகீதன் இருவரை தவிர ஒரு கதாப்பாத்திரமும் முழுமையில்லை, சுவாரஸ்யமும் இல்லை. கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷ் எப்படி இதை ஒப்புக்கொண்டார் என தெரியவில்லை. அதேபோல் ஒன்றல்ல, இரண்டல்ல படத்தின் முழுமையும் லாஜிக் மீறல்கள் தான், இதெல்லாம்தான் படத்தை நம்முடன் இணைக்காமல் நெருடலடைய வைக்கிறது. படத்தின் நிலை அறிந்து தான் முதலில் டிவியில் ஒளிப்பரப்ப முடிவு செய்திருப்பார்கள் போல! நல்ல கருத்து ஆனால் அதை சொல்ல தெரியாமல் சொல்லி நம் சோலியை முடித்துள்ளனர். இறுதியாக அழகான ஒளிப்பதிவிற்காகவும், அழகான லொகேஷன்களுக்காக விருப்பப்பட்டால் ஒருமுறை பார்க்கலாம். மற்றபடி, ஆவ்ரேஜ்தான் இந்த பூமிகா....
BOOMIKA MOVIE FC RATING: 2.5 /5
Leave Comments
Post a Comment