ஷெர்ஷா திரைப்பட விமர்சனம் | Shershaah Review and Rating
படக்குழு:
நடிகர்கள்: சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி, ஷிவ் பண்டிட் மற்றும் பலர்.
இசை: ஜான் ஸ்டீவர்ட் எட்யூரி (பின்னணி இசை)
ஒளிப்பதிவு: கமல்ஜீத் நேகி
எடிட்டிங்: ஸ்ரீகர் பிரசாத்
தயாரிப்பு: தர்மா ப்ரொடக்ஷன்ஸ் & காஷ் என்டர்டெய்ன்மென்ட்
இயக்கம்: விஷ்ணுவர்தன்
OTT: Amazon prime.

கதைச்சுருக்கம்:
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த கார்கில் வார் தான் கதையின் களம். அந்த கார்கில் போரில் சாதனை படைத்து, உயிர்விட்ட கரம்வீர் சக்ரா விருது பெற்ற கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்கையை தழுவி இப்படத்தை எடுத்துள்ளார்கள். கதையின் துவக்கத்தில் கார்கில் வார்களம் எங்கும் துப்பாக்கிசூடு, குண்டு வெடிப்பு என பதைபதைக்கும் போர்களம், அதில் விக்ரம் பத்ரா தலைமையிலான இராணுவ வீரர்கள் சண்டையிட்டு வருகின்றனர். கட் செய்தால், விக்ரம் பத்ராவின் சிறு வயது பருவம் முதல் ஆரம்பமாகிறது. ஹீரோவிற்கு இராணுவத்தில் சேர்ந்து சாதிக்க ஆசை, அந்த ஆசையை நோக்கி சென்றுகொண்டிருக்க ஹீரோயினிடம்(கியாரா அத்வானி) காதலில் விழுகிறார்.
ஒருகட்டத்தில் காதலை ஓகே செய்ய, இவர்கள் காதலிப்பது ஹீரோயின் வீட்டிற்கு தெரிந்து விடுகிறது. விக்ரம் பத்ராவை அழைத்து பேச ஜாதி வித்தியாசத்தால் ஹீரோயின் தந்தை மறுக்க, ஹீரோயின் விடாபிடியாக இருக்கிறார். இப்படி செல்ல, ஹீரோவின் ஆசை இராணுவதிற்கு செல்வது, ஹீரோயினுக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை. இறுதியாக எப்படி இராணுவத்திற்கு சென்றார்? அங்கு அவர் புரிந்த சாதனைகள் என்ன? கடைசியில் ஹீரோயினை கரம் பிடித்தாரா? என்பதே சுவாரஸ்யமான மீதிக்கதை.

FC விமர்சனம்:
போர்க்களம், இராணுவ வீரரின் வாழ்க்கை எப்படி இருக்கும், அவர்களை சுற்றியுள்ளவர்கள் மனநிலை என்ன என்பதையெல்லாம் மிக அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்கள். இப்படத்தின் இயக்குனர் நம் விஷ்ணுவர்தன் தான், தல அஜித்துடன் பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட படங்களை இயக்கிய விஷ்ணு பாலிவுட்டில் ஆழமாக தனது காலடியை பதித்துள்ளார். திரைக்கதை, வசனம் இரண்டு மிக அழகாகவும், சுவாரஸ்யமாகவும் கொண்டு சென்றுள்ளார். ஹீரோ சித்தார்த் மல்ஹோத்ரா இராணுவ வீரருக்கான தோற்றமும், கம்பீரமும், உடன் காதல், இறக்கம் என அனைத்தையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். திறமையான நடிப்பு.
ஹீரோயின் கியாரா அத்வானி கொள்ளை கொள்ளும் அழகில் படமுழுக்க கவர்ந்து செல்கிறார். ஹீரோ - ஹீரோயினுக்கான கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க்அவுட் ஆகியுள்ளது.

பாடல்களை பொறுத்தவரை ஓகே ரகம்தான், ஆனால் பின்னணி இசை அருமை. ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் பெரிய பலமாக அமைந்துள்ளது. குறையென்றால் விறுவிறுப்பாக இராணுவம், சண்டை சார்ந்த காட்சிகள் செல்லும் போது இடையில் காதல், ரொமான்ஸ் என வருவது சிறிய நெருடல். ஆனால் காதல் காட்சிகளில் எந்தவித குறையுமில்லை, அழகாகத்தான் வந்துள்ளது. என்ன வருகின்ற இடம்
நம்மை லேசாக சோதிக்கும், இது பெரிய குறையில்லை. இதை தவிர்த்து உண்மையில் நாம் இங்கு சுதந்திரமாக குடும்ப கஷ்டங்களை தவிர வேறு எதுவும் இல்லாமல் வாழ்கிறோம், அதற்கு காரணமாக பாதுகாப்பு அரண்களாக இருக்கும் இராணுவ வீரர்களை நினைத்து பாருங்கள். எந்நேரமும் திக் திக் என்கிற வாழ்க்கை, ஒருமுறை வந்தால் மீண்டும் வீட்டிற்கு செல்வோமா? இல்லையா? என்கிற எண்ணத்தில் தினமும் கடக்கும் வாழ்க்கை, அவர்களது குடும்பத்தாரின் மனநிலை எப்படி இருக்கும் இதெல்லாம் ஒரு நிமிடம் நம்மை நினைத்து பார்க்க வைக்கிறது இப்படம். வாழ்த்துக்கள் விஷ்ணுவர்தன் & டீம். இறுதியாக கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம் தான் இந்த ஷெர்ஷா...
Shershaah Movie FC RATING: 3.75 /5
Leave Comments
Post a Comment