நெற்றிக்கண் திரைப்பட விமர்சனம் | Netrikann Movie Review

 நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்பட விமர்சனம் இதோ...

படக்குழு:

நடிகர்கள்: நயன்தாரா, அஜ்மல், மணிகண்டன், ஷரன் ஷக்தி மற்றும் பலர்.

இசை: க்ரிஷ் கோபாலகிருஷ்ணன்

ஒளிப்பதிவு: R.D. ராஜசேகர்

தயாரிப்பு: ரவுடி பிக்சர்ஸ் & க்ராஸ் பிக்சர்ஸ்

இயக்கம்: மிலிந்த் ராவ்.

OTT: டிஸ்னி + ஹாட்ஸ்டார்.

Nayanthara's Netrikann Movie Release Update 

கதைச்சுருக்கம்:

போலீஸ் அதிகாரியான படத்தின் நாயகி நயன்தாரா, எதிர்பாராத ஒரு விபத்தால் கண் பார்வையை இழக்கிறார். தொடர்ந்து, கதை செல்ல ஒரு காட்சியில் கால் டாக்சி என்று நினைத்து ஒரு காரில் பயணம் செய்கிறார். அந்த கார் டிரைவர் இவரிடம் பேசிக் கொண்டே ஒரு சம்பவத்தை ஏற்படுத்த, சூடுபிடிக்கிறது கதை. மறுபுறம் சிட்டியில் பெண்கள் அடிக்கடி கடத்தப்படுவதாக செய்திகள் வர, ஒருவேளை நாம் டாக்ஸி என நினைத்து ஒருவன் காரில் சென்றோமே அவனுக்கும், இந்த கடத்தல் சம்பவத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என நினைத்து, போலீஸிடம் செல்கிறார் நயன்தாரா. கண் தெரியாத இவர் சொல்வதை வைத்து என்ன செய்வது என நினைக்கும் அதிகாரி, பிறகு சம்மதிக்கிறார். இதற்கு பிறகு கண் தெரியாத ஒரு பெண், யார் அந்த சைக்கோ கொலைகாரன்? என்பதை கண்டுப்பிடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

Nayanthara's Netrikann Movie Release Update 

FC விமர்சனம்:

2011 -ஆம் ஆண்டு சௌத் கொரியன் படமான 'Blind' என்கிற மெகா ஹிட் படத்தின் தழுவலாக இந்த நெற்றிக்கண் உருவாகியுள்ளது. படத்தின் நாயகி நயன்தாரா, உடல் இளைத்து இருந்தாலும் முகத்தில் அந்த க்யூட் குறையவில்லை நயனுக்கு, அதேபோல் நடிப்பும் கண் தெரியாதவர் போல அருமையாக நடித்துள்ளார். முழு படமும் நயன்தாரா ஒருவரின் தோல் மேல் தான் செல்கிறது. படத்தின் கொடூர வில்லன் அஜ்மல், இப்போது நாம் நிறைய கொரியன், ஹாலிவுட் சைக்கோ படங்களை பார்த்து சலித்துவிட்டதால் பெரியளவு மிரட்டலாக தெரியவில்லை என்றாலும், கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். நல்ல நடிகர் அடுத்தடுத்து நல்ல படங்கள் நடிக்கட்டும்... அதேபோல மற்ற நடிகர்களும் எடுத்த பாத்திரங்களை நன்றாக செய்துள்ளனர்.

Netrikann Movie Review and Rating 

படத்தின் மிகப்பெரிய பலம் ஒரு புறம் நயன்தாரா என்றால், மறுபுறம் ஒளிப்பதிவாளர் R.D.ராஜசேகர் ஒவ்வொரு காட்சியும் கிரிஸ்டல் கிளியராக வந்துள்ளது. இசையை பொறுத்தவரை பாடல்கள் நன்றாக இருந்தாலும், இது போன்ற சைக்கோ படங்களுக்கு தேவையான பின்னணி இசை குறைகிறதோ என்கிற எண்ணம் வருகிறது. எடிட்டர் இரண்டாம் பாதியில் அதிகம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஒரு ரீமேக் கதையை எடுக்கபோகிறோம் என முடிவெடுத்த பிறகு அதை அப்படியே எடுத்தால் என்ன? யார் என்ன சொல்ல போகிறார்கள்? தமிழுக்காக சில மாற்றங்கள் செய்கிறோம் என நினைத்து திரைக்கதையை ஜவ்வாக இழுத்து வைத்திருக்கிறார்கள்.

முதல் பாதி நன்றாக சென்றாலும் இரண்டாம் பாதி சோதிக்கத்தான் வைக்கிறது. அதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். அதேபோல், நமக்கு ஏற்றார் போல் காட்சிகளை மாற்றும் போது பல லாஜிக் மீறல்களை கண்டுக்காமலே சென்றிருகிறார்கள், அதுவும் சற்று நெருடலாகத்தான் இருக்கிறது. இறுதியாக, அந்த கொரியன் Blind படத்தை பார்க்காதவர்கள் ஒருமுறை இப்படத்தை பார்க்காலாம். மற்றபடி சுமார் ரகம்தான் இந்த நெற்றிக்கண்...

  Netrikann FC RATING: 2.5 /5  

 

FacebookTwitter | InstagramYoutube 

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Atas Artikel

Ads Tengah Artikel 1

Ads Tengah Artikel 2

Ads Bawah Artikel